புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

பாடல்: புருன் வீட்டில்
திரைப்படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்.
இசை: எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வரராவ் 
ஆண்டு: 1958




புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே



புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே


அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்
புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே


மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு 
சமையல் வேலை துவக்கணும்


புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே


கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே


புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே


புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுக
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்


புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே
தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே


புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும் 
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு
மக்களைப் பெத்து மனையப் பெத்து 
மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி
 

No comments:

Post a Comment