கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

பாடல் - கடவுள் இருக்கின்றார்
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.. விஸ்வநாதன், பி ராமமூர்த்தி

ஆண்டு: 1963
கடவுள் இருக்கின்றார் கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா?

இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா?
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகி்ன்றதா?
வெளியே தெரிகின்றதா?

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
கண்ணுக்குத் தெரிகின்றதா?

புத்தன் மறைந்து விட்டான் அவன்தன் போதனை மறைகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா? உலகில் தர்மம் அழிந்ததுண்டா?
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா?

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது

சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை வீசி காக்கவும் தயங்காது
காக்கவும் தயங்காது

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
கண்ணுக்குத் தெரிகின்றதா?
கடவுள் இருக்கின்றார் கடவுள் இருக்கின்றார்
கடவுள் இருக்கின்றார்

No comments:

Post a Comment