பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா
திரைப்படம்: ஆனந்த ஜோதி
பாடியவர்: டி.எம்.. சௌந்தரராஜன், பி சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
ஆண்டு: 1963
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?

இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?

அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
ஆஹா...ஆ... ஆஹா.. ஆ.. ஆ..ஆ..ஆஆஆ
தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாத நாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
No comments:
Post a Comment