பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
திரைப்படம் – நிச்சய தாம்பூலம்
பாடல் – பாவாடை தாவணியில்
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.இராமமூர்த்தி
வெளியீடு – 9 பெப்ரவரி 1962
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
(வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) - 2
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) - 2
முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
No comments:
Post a Comment