காதல் நிலவே கண்மணி
ராதா
திரைப்படம்: ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார்
பாடியவர்: பிபி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் இராமமூர்த்தி
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
கனவிலும் நானே மறுபடி வருவேன்
கவலையில்லாமல் தூங்கு
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ..ஆஆஆஆ..
கோடி செல்வரென்றாலும் தேடும் கள்வரென்றாலும்
யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும் காரிருள் வேளை
உன் கன்னத்தின் மீதே நானும் கன்னம் வைப்பதால்
இவன் கள்வனென்று என்னை நீயும் எண்ணி விடாதே
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே
உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன் ஆசையினாலே
நாளும் தூக்கமில்லாமல் ஓடும் நதியினைப் போலே
உன்னை தூக்கமின்றி காத்திருப்பேன் ஆசையினாலே
காதல் பாட்டு பாடுவேன் தாலாட்டு பாடுவேன்
உன் பார்வை சொல்லும் ஜாடையிலே உலகை வெல்லுவேன்
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு
ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆஆஆ..
யாரும் தேற்ற வந்தாலும் என்னை மாற்ற வ*ந்தாலும்
உன்னை சேர்ந்துவிட்ட நெஞ்சமொன்றும் மாறிவிடாது
அது கடமையென்றாலும் அந்த கடவுள் சொன்னாலும்
ஒன்று கலந்துவிட்ட நமது சொந்தம் பிரிந்துவிடாது
காதல் நிலவே கண்மணி ராதா
நிம்மதியாக தூங்கு !
No comments:
Post a Comment