கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள்
திரைப்படம்: கடவுளின் குழந்தை
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை
ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல் இருப்பது உனக்கே சரியாமோ?

உழவும் தொழிலும் இல்லாமல் உலகில் ஒன்றும் செல்லாது
விழவும் கலையும் விருன்துகளும் வேறுள இன்பமும்
இருந்திடுமோ?
வேறுள இன்பமும் இருந்திடுமோ? ஆஹஹஹா ஓஹோஹோ
ஆஹாஹாஹாஹா ஹஹாஹா ம்ம்ம்ம்ம்ம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை
ஒப்புக்கொள்
கொல்லரும் தச்சரும் கூடாமல் கூடமும் மாடமும் வீடாமோ?
கல்லடி சிற்பியும் தச்சருமே காரியம் பலவினுக் கசசாணி
ஆஹஹஹா ஆஹஹஹா ஆஹாஹாஹாஹா ஹஹாஹா
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை
ஒப்புக்கொள்
நெசவுக் காரர்கள் நெய்யாமல் நிலத்தவர் உடைக்கென்
செய்வார்கள்
குயவன் செய்திடும் பாண்டமன்றோ குடித்தனம் நடத்திட
வேண்டுமென்றும்

ஆஹஹஹா ஓஹோஹோ ஆஹாஹாஹாஹா ஹஹாஹா ம்ம்ம்ம்ம்ம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை
ஒப்புக்கொள்
சலவை சவரம் செய்தாலும் சாக்கடை கழுவுதல் எய்தாலும்
உலகுக்கதனால் உபகாரம் ஒன்றும் தெரியார் வெறும்
பாரம்

ஆஹஹஹா ஆஹஹஹா ஆஹாஹாஹாஹா
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கிலை
ஒப்புக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல் இருப்பது உனக்கே சரியாமோ?
No comments:
Post a Comment