கண்ணிரண்டும் மின்ன
மின்ன
திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ் பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் வாலி
அஹ அஹ்ஹஹாஹா அஹஹஹ ஹாஹாஹாஹாஹஹா
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப்
பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா - என்
பித்தம் தீர் மருந்தொன்று சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப்
பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா - என்
பித்தம் தீர் மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா - என்
பார்வையிலே மருந்தொன்று இல்லையா?
கட்டழகு துள்ளத் துள்ள காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா - என்
பார்வையிலே மருந்தொன்று இல்லையா?
நெய் மணக்கும் கூந்தலுக்கு நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே வண்டு வந்து மோதுதம்மா
வண்டு வந்து தேனெடுத்து உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டுப் பாடுதையா தொட்டுத் தொட்டுப் பேசுதையா
தொட்டுத் தொட்டுப் பேசையிலே சொர்க்கமே தோன்றுதையா
பட்ட இடம் அத்தனையும் பனி போல் குளிருதையா
கண்ணிரண்டும் மின்ன மின்ன காலிரண்டும் பின்னப்
பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா - என்
பித்தம் தீர் மருந்தொன்று சொல்லம்மா
வாழைப்பூ கைகளுக்கு வளையல்கள் வாங்கிவந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன் தாங்கிக்கொள்ள நான்
வரவா
இல்லை என்று சொன்னதில்லை என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை சொன்ன மொழி கேட்டிருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன் உன்னழகைப் பார்த்திருப்பேன்
கண்திறந்து பார்த்திருப்பேன் பொன்னுலகம் பார்த்திருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன் உன்னழகைப் பார்த்திருப்பேன்
கண்திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே
ஆஹ்ஹஹ ஹஹஹஹ ஓஹொஹொஹொ ஓஹொஹொஹோ
ஓஹொஹோஹோ ஓஹொஹோஹோ ஓஹொஹோ
No comments:
Post a Comment