புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது

புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது

திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்:
 
புரியாது
புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரியாது
புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும்
ஆசைக்கு அளவேது
முடிவேது
முடிவேது முடிந்த பின் உலகம் நமக்கேது
முடிந்ததை
நினைத்தால் பயனேது
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
ஒரு சிலர் வாழ்வு தியாகத்தில் கூடும்
உரிமையும் அன்பும் மறுபடி சேரும்
திருமணமாகி ஒரு மனமாகும்
பெண்மனம் தாய்மையை தினம் தேடும்
வாழ்க்கையின் ரகசியம் புரியாது
வளரும் ஆசைக்கு அளவேது
பெருமைகள் பேசும்ம் பூமியில் பிறந்தார்
இறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
பெருமைகள் பேசும் பூமியில் பிறந்தார்
இறந்தவர் தாயின் மடிதனில் வளர்ந்தார்
வளர்ந்தவர் வாழ்வில் கொடுப்பதை மறந்தார்
ஒரு பிடி சாம்பலில் முடிவானார்

வாழ்க்கையின் ரகசியம் புரியாது
முடிந்ததை நினைத்தால் பயனேது

No comments:

Post a Comment