பாடல்: கண்ணிழந்த மனிதர் முன்னே
திரைப்படம்: ஆடிப்பெருக்கு
பாடலாசிரியர்: கே.டி. சந்தானம்
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: : ஏ.எம். ராஜா, பி. சுசீலா
ஆண்டு: 1962
கண்ணிழந்த மனிதர் முன்னே
ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார்
இரு
காதிருந்தும் பாதியிலே பாட்டை முடித்தார் பாட்டை
முடித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்குத் தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார்
காட்டி மறைத்தார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார் இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார் பாடலிசைத்தார்
No comments:
Post a Comment