காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா?

பாடல்: காவேரி ஓரம்  
திரைப்படம்: ஆடிப்பெருக்கு பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்  
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: : பி. சுசீலா
ஆண்டு: 1962

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா?


காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - அந்தக்
கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா? - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார்

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் கொஞ்சு்ம்
மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் - என்ற
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா? - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

மணவாழ்வு மலராத மலராகுமா?
மனதாசை விளையாத பயிராகுமா?
உருவான உயர் அன்பு பறிபோகுமா?
உயிர் வாழ்வு புவி மீது சுமையாகுமா? சுமையாகுமா?


2 comments:

  1. ரிலீஸ்:- 02nd ஆகஸ்ட் 1962;
    பாடலாசிரியர்:- K.D.சந்தானம்.

    ReplyDelete
  2. பாடலாசிரியர் கே.டி.சந்தானம். (கண்ணதாசன் இல்லை.)

    ReplyDelete